ஜியோ வந்த பிறகு மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தன.

அதில் குறிப்பாக ஏர்செல் நிறுவனமான அதிக சரிவை சந்தித்தது. ஜியோவிற்கு எதிராக வாடிக்கையாளர்களை தன் வசம்  வைத்துக்கொள்வதில் பெரும் சிரமத்தை அனுபவித்து வந்தது ஏர்செல். மற்ற நிறுவனங்களும் சரிவை சந்தித்தன.

ஆனால்,ஒரு சில சலுகையை ஜியோவிற்கு இணையாக வழங்கி , எப்படியோ குட்டிகரணம் போட்டு வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொண்டுள்ளது ஏர்டெல் மற்றும்  நிருவனங்கள்......

ஆனால் இந்த போட்டியை சமாளிக்க முடியாமல்,சமீபத்தில் 6 மாநிலங்களில் ஏர்செல் சேவையை நிறுத்த உள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டது டிராய்.

மேலும் மூன்று மாதத்திற்குள் மற்ற  நிறுவன சேவை பெற  மாறிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், தென் மாநிலங்களில் தொடர்ந்து ஏர்செல் சேவை வழங்கப்படும் என  ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது .

இந்நிலையில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பல இடங்களில்  ஏர்செல் சேவை கிடைக்கவில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து,வாடிக்கையாளர்கள் சேவை மையத்திற்கு சென்றனர்

அங்கு புகார் குறித்து பேசி சண்டையிட்டு உள்ளனர்.டவர் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் கூச்சலிடவே,இது குறித்து எந்த அர்விப்பும் எங்களுக்கு வரவில்லை..சரியாகி விடும் என தெரிவித்து உள்ளனர் .

முறையான பதில் கிடைக்காததால்,பொதுமக்கள் சண்டையிட்டு உள்ளனர். இந்நிலையில்,பல நபர்கள் சமூக வலைதளங்களில் "என்னுடையஏர்செல் நம்பர் வேலை செய்யவில்லை...இந்த புதிய நம்பருக்கு கால் செய்யுங்கள் என பலரும் அப்டேட் செய்துள்ளனர்.

இதே போன்று......

காட்பாடியில் உள்ள ஏர்செல் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை

காட்பாடியில் கடந்த ஒரு மாதமாக ஏர்செல் தொலை தொடர்பு சரியாக வேலை செய்ய வில்லை என்றும் அதனையடுத்து இன்று முன்அறிவிப்பு இன்று இரண்டாவது நாளாக முழுவதுமாக தொலை தொடர்பை துண்டித்ததால் பொதுமக்கள் ஏர்செல் அலுவகத்தை முற்றுகையிட்டு மண்டல மேலாளரிடம் வாக்குவாதம் செய்தனர்.