சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் ஏர் இந்தியா விமான நிறுவன தலைமை அலுவலகம், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ருக்குமணி லட்சுமிபதி சாலையில் ஏர் இந்தியா விமான நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு மையங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. தற்போது, இந்த அலுவலகம், நாளை மாலை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வரும் 24ம் தேதி முதல் ஏர் இந்தியா தலைமை அலுவலகம், விமான டிக்கெட் முன்பதிவு கவுன்ட்டர்களும், மீனம்பாக்கம் பழைய விமான நிலைய வளாகத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் செயல்படும். 

இது மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ளது. எனவே, ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும்பயணிகள், எழும்பூர் சென்று அலைய வேண்டியதில்லை. மீனம்பாக்கத்தில் உள்ள புதிய அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். திங்கள் முதல் சனி வரை காலை 9 மணி முதல் – மாலை 6 மணி வரை இந்த முன்பதிவு மையங்கள் செயல்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படுகிறது என கூறினர்.