திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், மனநலம் குன்றிய 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிமுக பிரமுகரும், கவுன்சிலரின் கணவருமான ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடமாடும் தையல் தொழிலாளியின் மகளான 16 வயது மனநலம் குன்றிய நிலையில் உள்ளார். அந்த சிறுமியிடம் அவிநாசி நகராட்சி 12வது வார்டு அதிமுக கவுன்சிலரான சாந்தியின் கணவரும், இரு சக்கர வாகனம் பழுது கார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வரும் அதிமுக 12 வது வார்டு கிளைச் செயலாளருமான ராஜேந்திரன் (51) பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர்அதிர்ச்சி அடைந்தனர். இதனையத்து அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை அறிந்த அதிமுக பிரமுகர் ராஜேந்திரன் தலைமறைவானார்.
இந்நிலையில் ஊத்துக்குளி பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறுமியின் பெற்றோரை மிரட்டியதாக பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் மூர்த்தி (52) என்பவர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மனவளர்ச்சி குன்றிய சிறுமியை அதிமுக பிரமுகர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வழக்கில் சிக்கியுள்ள அதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் மீது விரைவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
