கன்னித்தீவு போல நீளும் அதிமுகவின் ஊழல் கதை! பழனிசாமியின் குடுமி பாஜக கையில்! மு.க.ஸ்டாலின் பேச்சு

அதிமுகவின் ஊழல்கள் என்பது கன்னித்தீவு கதை போல நீள்வது என்றும் பழனிசாமியின் ஊழல் குடுமி பாஜக கையில் இருப்பதால் அவரால் ஒருபோதும் பாஜகவை விமர்சிக்க முடியாது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

AIADMK corruption story is like Kannitheevu! Palaniswami kudumi is in the hands of the BJP! MK Stalin speech in Erode sgb

அதிமுகவின் ஊழல்கள் என்பது கன்னித்தீவு கதை போல நீள்வது என்றும் பழனிசாமியின் ஊழல் குடுமி பாஜக கையில் இருப்பதால் அவரால் ஒருபோதும் பாஜகவை விமர்சிக்க முடியாது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு வேட்பாளர் பிரகாஷ், நாமக்கல் வேட்பாளர் மாதேஸ்வரன், கரூர் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

ஒவ்வொரு திட்டத்தையும் தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்லும் நோக்கில் செயல்படுத்துகிறோம். இதைப் பொறுத்துக்கொள்ளாமல் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் அரசை குறை கூறுவதாக நினைத்து, திட்டங்களால் பயனடையும் மக்களை கொச்சைப்படுத்துகிறார்கள். குதிரையில் அதிமுகவும் பாஜகவும் தாங்கள் என்ன செய்தோம் என்பதைக் கூறாமல் அவதூறு பயணம் செய்கின்றனர்.

இப்படி செல்ஃபி தேவையா... டால்பின் நோஸ் பாறையில் இருந்து 100 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது கலைஞரின் பாணி. சொல்லாததை செய்வோம், சொல்லாமலும் செய்வோம் என்பது ஸ்டாலின் பாணி. கெஜ்ரிவால் மீது மோடி அரசின் அடக்குமுறையால் இந்தியா கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. எப்போதும் அடக்குமுறை வெல்லாது என்பதை இந்தத் தேர்தல் மூலம் பாஜகவினர் உணர்ந்துகொள்வார்கள். வரும் ஜூன் 4ஆம் தேதி வரலாற்றில் இந்தியாவின் இரண்டாவது விடுதலை நாளாகப் பதிவாகும்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடி, ஊருக்கு உபதேசம் செய்யலமா? பிரதமர் மோடி மொத்த அதிகாரத்தையும் தன்னுடைய பாக்கெட்டில் வைக்க நினைக்கிறார்.

தேர்தல் நெருங்க நெருங்க தோல்வி பயத்தில் செய்யக் கூடாததை எல்லாம் செய்கிறார் பிரதமர் மோடி. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே இருந்தால் வலிமையாகத் தேர்தல் பணியாற்றுவார்கள் என்று பயந்து நடுங்கிக் கைது செய்திருக்கிறார்கள்.

அதிமுகவின் ஊழல்கள் என்பது கன்னித்தீவு கதை போல நீள்கிறது. எடப்பாடி பழனிசாமியின் ஊழல் குடுமி பாஜக கையில் இருக்கிறது. பழனிசாமியால் ஒருபோதும் பாஜகவை விமர்சிக்கவோ எதிர்க்கவோ முடியாது.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் கூறியிருக்கிறார்.

சேவையே கடவுள்... இளைஞர் சிவசக்திக்கு ராகவா லாரன்ஸ் செய்த உதவி... குவியும் பாராட்டு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios