தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வைப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு பருவ மழையினால் இந்த ஆண்டு எதிர்பார்த்தை விட இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் அதிக வெயில் காரணமாக, தற்போது தமிழக கடாலோர பகுதிகளில் வெப்பச்சலனம்  நிலவி வருகிறது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாறு மற்றும் தேவாலா 3 செமீ மழை பதிவாகி உள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தற்போது பெய்து வரும் மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோடை காலத்தில் பெய்து வரும் மழையினால் வெயிலிலிருந்து சற்று நிவாரணம் கிடைத்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.