again rain will come in south region
வங்கக்கடலில் உருவான புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய வைப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது
ஓகி புயல் காரணமாக தென் தமிழக மாவட்டங்கள் பெரிய அளவில் மழையை சந்தித்தது.இதன் காரணமாக பல ஏரிகள் வேகமாக நிரம்பின.
இருந்தபோதிலும்,மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது
இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆனால் இனி வரும் காலங்களில் குளிர்காலம் என்பதால்,மழையை எதிர்பார்க்க முடியாது என்றே சொல்லலாம்.
ஆனாலும் அடுத்து வரும் இரண்டு மாதங்கள் கழித்து கோடைகாலம் நெருங்க உள்ளதால்,வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
