again rain in chennai
சென்னையில் நேற்று மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் இன்று காலை மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. அடையாறு, திருவல்லிக்கேணி, கிண்டி, வேளச்சேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஏற்கனவே 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் கடந்த ஒரு வாரலமாக கனமழை பெய்து வருகிறது, பலத்த மழையால் சென்னை நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடியுருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதே நேரத்தில் நேற்று பகல் முழுவதும் மழை ஓய்ந்து வெயிலடித்தது.
மழையும் படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
சென்னை அடையாறு, திருவான்மியூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மேலும் வடசென்னை பகுதிகளான ஆர்.கே.நகர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மீண்டும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே தொடர்மழை காரணமாக சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
