பாலேஸ்வரம், செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில், இருந்து மீற்க்கப்பட்ட முதியவர்களை அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகத்திற்கு  மாற்றப்பட்டனர்.அதில்சில முதியவர்கள் மட்டும் மன நோய் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தனர்

இவர்கள் அனைவரும், மூன்று கட்டமாக பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து மீட்கப் பட்டனர்.தொடர்ந்து கருணை இல்லத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து, அதன் நிர்வாகி தாமஸ் தொடுத்த வழக்கில், மாவட்ட நிர்வாகத்தினால் அழைத்து செல்லப்பட்ட 294 முதியவர்களில் 12 பேர் இறந்து விட்டதாக போலீஸ் அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டது. 

எஞ்சி உள்ள 282 பேரை மீண்டும் பாலேஸ்வர இல்லத்தில் சேர்க்க வேண்டும் என நேற்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. 

ஆனால் தற்போது அரசு அங்கிகாரம் பெற்ற காப்பகத்தில் இருந்து மீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு செல்ல மாட்டோம் என அங்கே இருந்து மாவட்ட நிர்வாகத்தினால் மீட்கப்பட்டவர்கள் கூறியுள்ளார்கள்.

பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் போதிய மருத்துவ வசதிகள் சுகாதாரமான உணவுகள் என எதுவும் கிடைப்பதில்லை என புகார்  கூறி  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதியவர்கள் மருத்துவ ஆய்விற்காக பயன்படுத்தப்படுவதாகவும்,அவர்கள் இறந்த பிறகு, அவர்களுடைய எலும்புகளை மருந்துகள் செய்ய   விற்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டு தான், அங்கிருந்து முதியவர்களை வெளியேற்றினர்.

ஆனால் தற்போது,மீண்டும் அதே கருணை இல்லத்திற்கு அந்த முதியவர்களை கொண்டு சேர்க்க வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளது.

பாலேஸ்வரம் கருணை இல்லம்

பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு ஆதரவற்ற அநாதை  முதியவர்களை கடத்தி சென்று அங்கு சரிவர கவனிப்பு இல்லை என்றும்..

அங்கு தங்க தங்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லும் பல  முதியவர்கள்....

இறந்த உடலுடன், இரண்டு முதியவர்களை வலுக்கட்டாயமாக போலி  ஆம்புலன்ஸ் மூலம் கடத்தி சென்றது,மற்றும் சுகாதாரத்துறை  ஆய்வு செய்து,அங்கு தங்கியுள்ள முதியவர்களின் உடல் நிலை குறித்த  அறிக்கை தாக்கல் செய்தது......

பின்னர், பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து அனைவரையும்  மீட்டது அரசு...

இவை அனைத்தும் மாபெரும் குற்றச்சாட்டாக வைக்கப்படும் போது எந்த  அடிப்படையில் மீண்டும் அவர்களை பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம்  தெரிவித்து உள்ளது என்பது  குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

இதன் பின்னனி விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது