after 3 days only mersal will release in web

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக பிரச்சினைகள் பல உருவானாலும், அதற்கு ஏற்றவாறு படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களையும், அதிக லைக்குகளையும் பெற்று சாதனை படைத்து வருகிறது. 

மெர்சல் படத்திற்கு மெர்சல் காட்டிய தமிழ் ராக்கர்ஸ்

மெர்சல் படம் தீவ்பாவளிக்கு திரைக்கு வர இருப்பதால்,ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.

இதற்கிடையே எந்த ஒரு படம் வந்தாலும்,அதே நாளில், இணையத்தில் வெளியிட்டு வந்தது தமிழ்ராக்கர்ஸ். சொல்லப்போனால் உண்மையான மெர்சலை தமிழ் ராக்கர்ஸ் தான் செய்கிறார்களோ என நினைக்க தோன்றும்.

இதற்கு முன்னதாக மெர்சல் படம் வெளியாகும் அதே தினத்தில் இணையத்தில் மெர்சல் வெளியிடப்படும் என தமிழ்ராக்கர்ஸ். தெரிவித்து இருந்தனர்

இந்நிலையில் மனம் இறங்கிய தமிழ்ராக்கர்ஸ், படம் வெளியான மூன்று நாட்களுக்கு பிறகு தான் இணையத்தில் மெர்சல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது