இதை விட உலகில் சிறந்த காதல் உண்டா என்ன..? ........வாழ்க்கைக்கு பின் இணைந்த காதல் ஜோடி..! வேலூரில் ஆச்சர்யம்..!  

ஜெயிலில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஒரு சிலரை விடுதி செய்து வருகின்றனர்.அதில் தற்போது, நேற்று வேலூர் ஆண்கள் ஜெயிலில் 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் 65 வயதான திருப்பூர் நாச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த தாடிக்காரன் என்ற சுப்பிரமணியம் என்பவரும்  ஒருவர். இவர் தற்போது அவரது காதல் மனைவியோடு இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்து உள்ளது 

28 ஆண்டுகளுக்கு முன்பாக, இலங்கை தமிழர் பிரச்சினையின் போது அகதியாய் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தவர் பக்கா என்றழைக்கப்படும் விஜயா. இவருக்கு தற்போது வயது 60. இவர் தமிழகத்திற்கு அகதியை வரும் போது தனக்கு தெரிந்த நடனம் ஆடி பிழைப்பு நடத்தி வந்துள்ளார் 

இவருடைய நடனத்தை பார்த்து, காதல் வலையில் விழுந்தவர் தான் தாடிக்காரன் என்றழைக்கப்படும்  சுப்பிரமணியம். இவரது வீட்டில் காதலை ஏற்க மறுத்ததால் 1985-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி விஜயாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் 

விஜயா இவருக்கு நடனமாட கற்றுக்கொடுத்து, பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்த நடனமாடி மகிழ்ச்சியான் வாழ்க்கை நடத்தி வந்து உள்ளனர். சுமார் ஐந்து ஆண்டு காலம் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்த இந்த தம்பதிகளுக்கு குழந்தை வரம் இல்லாமல் இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க, எப்போதும் போல ஓரிடத்தில் நடனம் முடிந்த உடன் களைப்பில் சாலை ஓர் இடத்தில் படுத்து உறங்கி உள்ளனர் 

அப்போது நடந்த ஒரு நிகழ்வு தான் இவர்களது வாழ்கையை புரட்டி போட்டு விட்டது.  

சாலை ஓர் இடத்தில்  உறங்கிக் கொண்டிருந்த விஜயாவிடம் யாரோ ஒரு நபர் தவறாக நடக்க முயன்று உள்ளார். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியம் அந்த நபரை தாக்கியதில் அவரது தலையில் பலமாக அடிப்பட்டு ஸ்பாட் அவுட் ஆகியுள்ளார். ஆனால் தம்பதிகள் மீது வழிப்பறியில் ஈடுபட்டு அவரை கொலை செய்துவிட்டதாக சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களின் வாழ்கையை நரகத்திற்கு  அனுப்பி விட்டனர். பின்னர் இவர்கள் இருவரையும் 1990-ம் ஆண்டு போலீசார் கைது செய்து, வழக்கு  நடைபெற்றதில் கோவை கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து வேலூர் பெண்கள் சிறையில் விஜயாவும், ஆண்கள் ஜெயிலில் சுப்பிரமணியமும் அடைக்கப்பட்டனர்.

வாதாட யாரும் வர வில்லை 

காதல் வாழ்க்கை என்பதால், தங்களுக்காக யாரும் வாதட கூட வராத ஒரே காரணத்தால், 28 ஆண்டு காலத்திற்கு பிறகு, தற்போது தான் வெளியே வந்து உள்ளனர். இந்நிலையில் விஜயாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார். அதன் பின்னர் அவரது பேச்சும் பறிபோனது பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். 

விடுதல் ஆன பின், இவர் வேலூர் அருகில் உள்ள அரியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கி தனது கணவருக்காக காத்திருந்த சம்பவம்...இந்நிலையில் தான் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவையொட்டி நேற்று வேலூர் மத்திய சிறையில் இருந்த சுப்பிரமணியம் 28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். 

விடுதலையான அடுத்த நொடியே தான் முதலில் பார்க்க வேண்டிய நபர்... தன் காதல் மனைவி தான் என அனைவரிடமும் சொல்லிவிட்டு மனைவி தங்கி இருக்கும் முதியோர் இல்லத்தை வந்தடைந்து உள்ளார் சுப்பிரமணியம் 

அங்கு தனது கணவருக்காக 28 ஆண்டுகள் காத்திருந்த விஜயா சிறு குழந்தையாக மாறி சுப்பிரமணியத்தை பார்த்ததும் ஓடிச்சென்று கையை பிடித்து கதறி அழுது கண்ணீர் வடித்துள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த அனைவரின் கண்களும் கலங்கி நின்று உள்ளது.

விஜயா எப்போதும் சுப்ரமணியத்தை மாமா என்று தான் அழைப்பார். மாமா என விஜயா சுப்ரமணியத்தை பார்த்து பேச முயன்றதும்....நீ சாப்டியா.. நீ சாப்டியா..? என உண்மை காதலுடன் சுப்ரமணியம் கேட்டதும் காண்போரை நெகிழ வைத்து உள்ளது...

இதுகுறித்து சுப்பிரமணியம் கூறும்போது, இனி அவளுக்கு நான் தான்.. எனக்கு அவள் தான்.. இனி யாரும் எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை...என் உயிர் உள்ளவரை விஜயாவை விட்டு பிரிய மாட்டேன். எங்கள் சொந்த ஊருக்கே நாங்கள் போக போகிறோம் என அவர் தெரிவித்து உள்ளார்.