உஷார்..! தமிழகத்தின் 6 மாவட்டத்திற்கு "அவசர வெள்ள அபாய எச்சரிக்கை"..! 

கேரளா மற்றும் கர்நாடக தமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது .கர்நாடகா, மற்றும் கேரளாவில் அதிக அளவில் மழை பெய்வதால் அணைகளில் உபரி நீர் அதிகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. கேரளாவின்  பல்வேறு மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர். மேலும், நிலைமையை சமாளிக்க மத்திய அரசின் உதவியை நாடி உள்ளது கேரள அரசு.


 
6 மாவட்டத்திற்கு எச்சரிக்கை..! 

கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சை ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில், 2 நாட்களுக்குள் மேட்டூருக்கான நீர்வரத்து 1 லட்சம் கன அடிக்கு மேல் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு உள்ளது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கேரளா மற்றும் கர்நாடாக மாநில எல்லையில் அதிக மழை பெய்து வருகிறது.

மேலும், இதன் காரணமாக,மேட்டூர் அணைக்கு  நீர் வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால், கரையோர மக்கள் வேறு இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த அறிவிப்பால் விவசாய மக்கள்  ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.