மார்ச் 29  ஆம்  தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றம் உத்கரவிட்டும்,மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதால், தமிழகம் முழுவதும் மக்கள் தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில், ஆளும் அதிமுக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம்  கொடுக்கும் நோக்கில், இன்று உண்ணாவிரம் இருந்து வருகின்றனர்

சென்னையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் பன்னீர் செல்வம் பங்கேற்றனர்

இதே போன்று மாவட்டம் தோறும்,தலைமை நிர்வாகிகள் தலைமையில்  போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

வேலூர் மாவட்டத்தில், அண்ணா கலைஅரங்கம் அருகில் அதிமுக  சார்பில் உண்ணா விரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் சட்டமன்ற உறுப்பினர்,மாவட்ட நிர்வாகிகள் என அனைவரும் பங்கு பெற்றனர்

உண்ணா விரதத்தில் மதிய உணவு

இந்நிலையில்,வேலூரில்  நடைப்பெற்று வரும் போராட்டத்தின் இடையே மதிய உணவு வேளையின் போது, நிர்வாகிகள் பலரும் ஒவ்வொருவராக அண்ணா கலை அரங்கத்திற்கு பின்புறம் சென்று,ஏற்கனவே தயார்  நிலையில் வைக்கப் பட்டு உள்ள அறுசுவை உணவை உண்டனர்

தமிழக மக்களின் உணர்வை மதிக்கும் வகையிலும், முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் தாங்களும் உண்ணா விரதத்தில் ஈடுபடுகிறோம் என கூறும் அதிமுகவினர் இப்படி மதிய உணவு வேளையின் போது, உணவை எடுத்துக்கொண்ட காட்சியை யாரோ நைசாக போட்டோ   எடுத்துவிட்டார்.அது அப்படியே செய்தியாக மாறி விட்டது...இவர்களின்  செய்கையை பார்த்து ஒரு சில கேலிகூத்தாக பார்க்கின்றனர்.

பலரும் சமூக வலைதளங்களில் இது குறித்து தங்களுடைய மேலான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.