குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க கூடாது என வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியரசு தலைவருக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் பாஜக வேட்பாளராக பீகார் முதலமைச்சராக இருந்த ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீராக்குமாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து பாஜக வேட்பாளருக்கு  அதிமுகவின் 3 அணிகளும் காங்கிரஸ் வேட்பாளருக்கு திமுகவும் ஆதரவு தருவதாக அறிவித்துள்ளனர்.

நாளை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பாஜக வேட்பாளரை ஆதரிக்க கூடாது எனவும் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அதிமுக தலைமை கழகத்தின் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் ஏறாளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.