டிடிவி தினகரன் கெடு விதித்த 60 நாட்கள் நிறைவடைந்ததையடுத்து அதிமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை இன்று அறிவித்துள்ளார்.

64 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார் டிடிவி தினகரன்.

அதில், கொள்கை பரப்பு துணை செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

தேர்தல் பிரிவு செயலாளராக தங்கதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக அமைப்பு செயலாளர்களாக பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், ஜக்கையன், மேலூர் சாமி, சன்முகவேலு, கு.ப.கிருஷ்ணன், மாதவரம் மூர்த்தி  உள்ளிட்ட 64 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2019 தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்துடன் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதலோடு அறிவித்துள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.