திருவள்ளுர் அருகே அதிமுக கவுன்சிலரை வெட்டி படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்த வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் இன்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ஆறுமுகத்தை கொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் சென்னை –திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறயலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததையடுத்து அதிமுகவினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
