அதிமுகவின் வேட்பாளர்கள் பலம் 136 ஆக உயர்ந்துள்ளது. இதனால், திமுகவின் நம்பிக்கை தகர்ந்துவிட்டது.
நடந்து முடிந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 134 இடங்களில் ஆமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக 89 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது.
அதிக பணம் பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தெழகுதி தேர்தல் நிறுத்தப்பட்டன. தமிழக வரலற்றில் முதன்முறையாக 2 தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டதால், பிரதான கட்சிகள் அதிர்ச்சியடைந்தன.
மேலும், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சீனிவேல், உடல்நிலை குறைவால், திடீரென காலமானார். இதனால், அதிமுகவின் பலம் ஒன்று குறைந்து 133ஆகி போனது.
தற்போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்று வருவதால், சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 136ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, வெற்றிக்கனியை பறிக்கலாம் என திட்டமிட்டது திமுக.
அந்த கட்சியின் பொருளாளர் ஸ்டாலினும் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனாலும், அதிமுகவே தொடர்ந்து வெற்றி கொடி நாட்டி வருகிறது.
இந்த நிலையில் இடைத்தேர்தல் தோல்வி முகம் என்று, கொஞ்சம் நஞ்சம் இருந்த திமுகவின் நம்பிக்கையை மேலும் உடைத்தெறிந்துள்ளது.
வெற்றி முகத்தோடு உள்ள அதிமுக தொண்டர்களும், பின்னடைவு காரணமாக திமுக தொண்டர்களும் சோகமாக உள்ளனர்.
