Asianet News TamilAsianet News Tamil

விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பம் வரவேற்பு.. மாணவ, மாணவியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்கள் 23 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Admission to Sports Hostels, Centers: Apply from today
Author
First Published May 17, 2023, 11:03 AM IST

விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தினை இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றது. மாணவியர்களுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

Admission to Sports Hostels, Centers: Apply from today

இதையும் படிங்க..8 ஆண்டுகளில் இல்லாத வெயில்.. இன்னும் 2 நாள் கவனம்! தமிழக மக்களை எச்சரித்த வானிலை மையம்

மேலும், மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி – சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சி, மற்றும் திருநெல்வேலி மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் ஈரோடு, மாணவ, மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சத்தூவச்சாரி, வேலூர் ஆகும்.

மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு சேர்க்கையும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6ம் வகுப்பு, 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் 24ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டரங்கங்களில் நடைபெற உள்ளது.

இந்த சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை இன்று முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் வரும் 23ம் தேதி மாலை 5 மணி. மேலும் தகவல்களுக்கு 9514000777 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்வுப் போட்டிகள் வரும் 24ம் தேதி காலை 7 மணியளவில் நடத்தப்பட இருப்பதால் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..இனி உங்க காதலியின் Chat பாதுகாப்பா இருக்கும்.. யாராலும் படிக்க முடியாது.! WhatsApp அசத்தல் அப்டேட்

Follow Us:
Download App:
  • android
  • ios