Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் பலமாக காலூன்றும் அதானி குரூப் நிறுவனம் …. காட்டுப்பள்ளி  துறைமுகத்தை வாங்கியது !!

adani group of companies bought kattuppalli port
adani group of companies bought kattuppalli port
Author
First Published Jun 30, 2018, 10:29 AM IST


பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அதானி குரூப் ஆஃப் கம்பெனி,  சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்திடம் இருந்து ரூ.1,950 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த அதானி நிறுவனம் பிரதமர் மோடிக்கு நெருக்கமான கம்பெனி என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பல ஆணிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் பவர் யூனிட் அமைத்து வருகிறது.

மறைந்த மதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இந்த பவர் யூனிட் தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. தற்போது அந்த நிறுவன்ம் சென்னை அருகே துறைமுகத்தை வாங்கியுள்ளது.

சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு அருகேயும், சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவிலும் காட்டுப்பள்ளி துறைமுகம் அமைந்துள்ளது. கர்நாடக, பெங்களூரு மண்டலம், ஆந்திராவின் தெற்குப்பகுதி, வடதமிழ்நாடு ஆகியவற்றை இணைக்கும் முக்கியப்பகுதியாகவும், ஏற்றுமதி, இறக்குமதிக்கு முக்கியத் தளமாகவும் காட்டுப்பள்ளி துறைமுகம் இருந்து வருகிறது.

adani group of companies bought kattuppalli port

துறைமுக நிறுவனமான மரைன் இன்ப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கும், அதானி குழுமத்துக்கும் இடையே செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்த துறைமுகம் கைமாறியுள்ளது.

அதன்படி  லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தின் 97 சதவீத பங்குகளை முறைப்படி அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தென் இந்தியாவில் மிகப்பெரிதான காட்டுப்பள்ளி துறைமுகத்தை நவீனப்படுத்தவும், அடுத்த 3 ஆண்டுகளில் 4 கோடி டன் சரக்குகளைக் கையாளும் அளவுக்குத் துறைமுகத்தை நவீனப்படுத்தவும், கட்டுமானத்தை எழுப்பவும் அதானி  குழுமம் முடிவு செய்துள்ளது.

adani group of companies bought kattuppalli port

தற்போது காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 710 மீட்டருக்கு இரு தளங்கள் உள்ளன. 6 ராட்சத கிரேன்கள்,15 ஆர்டிஜி கிரேன் உள்ளிட்ட எந்திரங்களால் 12லட்சம் டன் டியுஇ பெட்டகங்களைக் கையாள முடியும்.  

அதானி குழுமம் ஏற்கனவே கேரளாவில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியில் அந்த மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் துறைமுகத்தை சர்வதேச அளவில் ஆழப்படுத்த ரூ.4,089 கோடி செலவிடுகிறது அதானி குழுமம். இதுவரை அதானி குழுமம் முந்த்ரா, தாஹே, மர்மகோவா, விசாகப்பட்டிணம் உள்ளிட்ட 7 துறைமுகங்களை நிர்வகித்து வருகிறது

Follow Us:
Download App:
  • android
  • ios