நடிகை விஜயலட்சுமியை தனக்கு எதிராக தூண்டிவிட்டது திமுக என சீமான் பேசிய நிலையில், அமைதியாக இருந்து வந்த விஜயலட்சுமி மீண்டும் வீடியோ வெளியிட்டு சீமானை மோசமான வார்த்தையால் விமர்சித்துள்ளார். 

விஜயலட்சுமி- சீமான் மோதல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் இயக்குனர் சீமான், இவர் தம்பி, வாழ்த்துக்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயங்கியுள்ளார். வாழ்த்துக்கள் என்ற படத்தை இயக்கிய போது அப்படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமிக்கும் சீமானுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இதனையடுத்து சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி பரபரப்பு புகார் கொடுத்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் விஜயலட்சுமி தொடர்ந்து புகார் கூறி வந்தார். மேலும் தனக்கு திருமண ஆசை காட்டி தன்னுடன் குடித்தனம் நடத்தியதாகவும் கூறினார். தனது வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டார். இதற்கு சீமான் தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. 

மத்திய அமைச்சர் பதவியை நிராகரித்ததை விட அரசியலில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது தான்.. வேதனைப்படும் வைகோ

வழக்கை திரும்ப பெற்ற விஜயலட்சுமி

சீமானால் தான் கர்ப்பம் ஆகியதாகவும் ஆனால் இது வெளியே தெரியக்கூடாது என கரு சிதைவு செய்ததாக புகார் கூறியிருந்தார். இருந்த போதும் சீமானுக்கு எதிராக அவ்வப்போது வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகி தன்னை மிரட்டுவதாக திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். இதையடுத்து சீமான் ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். அப்போது சீமானும் விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தனது புகார் மனுவை விஜயலட்சுமி திரும்ப பெற்றுக்கொண்டார். தன்னால் இந்த வழக்கை நடத்த முடியவில்லையென்றும், சீமானை எதிர்க்க முடியவில்லையென கூறியிருந்தார்.

Scroll to load tweet…

விஜயலட்சுமியை இயக்கியது திமுக- சீமான்

இதனையடுத்து தனது அக்காவுடன் பெங்களூர் சென்றுவிட்டார். இந்த சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பெங்களூர்காரியை தனக்கு எதிராக பல ஆண்டுகளாக தூண்டிவிட்டது திமுக என சீமான் பேசியிருந்தார்.இந்த பேச்சு வைரலான நிலையில் அமைதியாக இருந்து வந்த விஜயலட்சுமி மீண்டும் வீடியோ வெளியிட்டு சீமானை வெளுத்து வாங்கியுள்ளார். அதில் எதற்காக என்னையும் திமுகவையும் இணைத்து பேசுறீங்க, திமுக, கலைஞர் மற்றும் என்னையே தவறாக பேசுவதை விட அரசியலில் வேறு எதுவும் உங்களுக்கு தெரியாதா.? என்னைய பற்றி பேசாதே என சொல்லியும் நீ என்னைய பற்றி எதற்காக பேசுகிறார்.

பதிலடி கொடுத்த விஜயலட்சுமி

நான் அமைதியாக பெங்களூரில் இருக்கேன். என்னைய பற்றியும் திமுகவை பற்றியும் தொடர்ந்து தவறாக பேசினால் 2026ஆம் ஆண்டும் தேர்தலில் தோல்வி தான் கிடைக்கும். இதோட நிப்பாட்டிக்கோ, கடைசியாக சொல்கிறேன். இதற்கு மேலும் என்னை பற்றி பேசினால் என்ன செய்வேன் என உனக்கு தெரியும் என மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி விஜயலட்சுமி அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.