மத்திய அமைச்சர் பதவியை நிராகரித்ததை விட அரசியலில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது தான்.. வேதனைப்படும் வைகோ
திமுகவுடன் தான் இனி கூட்டணி என தெரிவித்த வைகோ, திமுக என்ன முடிவு எடுக்கிறதோ அதை தான் நாமும் எடுக்க வேண்டும் என தொண்டர்களிடம் வைகோ தெரிவித்துள்ளார்.
durai vaiko
மதிமுக பொதுக்குழு கூட்டம்
மதிமுகவின் 30 வது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நகரில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய பாஜக அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து வரும் 14 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் எதிரே கண்டனம் ஆர்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொறுமையாக இருங்கள் என சொன்னேன்
இதனையடுத்து பொதுக்குழுவில் பேசிய மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, எனக்கு பிடித்த தலைவர் திருமாவளவன் தான், கண்ணுக்கு தெரிந்து அவர் அவரது உடல்நலனை கெடுத்துக் கொண்டிருக்கிறார். திருமாவின் உடல்நிலை முக்கியம். அவரை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளிடம் சொல்லி வருகிறேன். இதை தான் வைகோவிடம் பலமுறை சொன்னேன்.
கருணாநிதி ஜெயலலிதா இருக்கும் வரை பொறுமையாக இருங்கள். அவர்களுக்கு பின் உங்களுக்கு என்று ஒரு காலம் வரும். அது வரை உடல்நலனில் அக்கறை காட்டுங்கள் என சொல்வேன். ஆனால் என் பேச்சை அவர் அன்றும் கேட்கவில்லை. இன்றும் கேட்க மறுக்கிறார். நிம்மதியாக தூங்க மறுக்கிறார் என தெரிவித்தார்.
நான் செய்த தவறு
இதனை தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தொண்டர்கள் தான் உயிர் என்ற உணர்வோடு வாழக்கிறவன் தான் எனக்கு முகவரி கொடுத்தவர்கள் நீங்கள் தான் என கூறினார். மத்திய அமைச்சர் வாய்ப்பை ஏன் நிராகரித்தீர்கள் என பலரும் பலமுறை கேட்டுள்ளார்கள்? நான் அதை தவறாக நினைக்கவில்லை. தேர்தலில்சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்ததை தான் தவறு என நினைக்கிறேன். இன்று அதற்காக வருந்துகிறேன்.
திமுகவுடன் தான் கூட்டணி
திமுகவிற்கு எதிராக மக்கள் நல கூட்டணி அமைத்திருக்க கூடாது என கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் இப்ப சொல்றாங்க, நான் சொன்னேன் இப்ப சொல்லி என்னங்க பிரயோஜனம் என சொன்னேன். மதிமுகவை நடத்த நமது மாவட்ட செயலாளர்கள் மிகவும் பாடுபடுகிரார்கள். அவர்களுக்கு நான் துரோகம் செய்ய கூடாது அல்லவா, அதனால் இனி திமுக உடன் தான் கூட்டணி, இனி திமுக என்ன முடிவு எடுக்கிறதோ அதை தான் நாமும் எடுக்க வேண்டும் என பொதுக்குழுவில் வைகோ பேசினார்.