actress radhika afthe raised her voice against producer
“படுக்கைக்கு” வராததால் தென்னிந்திய படத்தில் நடிக்க வாய்ப்பு தரவில்லை-காரி துப்பிய நடிகை ராதிகா ஆப்தே...!
பொதுவாகவே திரை படங்களில் ஒரு பிச்சைக்காரியாக நடிக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றாலும் பெண்கள் எதை இழக்கக் கூடாதோ அதனை இழந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என வாய் கூசாமல் நேரடியாக,வாய்ப்பு தேடி வரும் பெண்களிடம் சில பட தயாரிப்பாளரும், இயக்குனர்களும்,நடிகர்களும் கேட்பதை கேள்வி பட்டிருப்போம்.
அது குறித்த உண்மை நிலையை குஷ்பூ கூட பேசி அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்வார். அதாவது உண்மையை பேசினதற்கு அவருக்கு சிக்கல் தான் வரும் பொதுவாகவே....
இந்நிலையில் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ள நடிகை ராதிகா ஆப்தே,தற்போது மனம் விட்டு பேசியுள்ளார்
அவர் கூறியது :
ஒரு முறை திரைப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, தன்னுடன் படுக்க முடியுமா என நேரடியாக கேட்டதாகவும், உடனே அவரை உதாசினப்படுத்திவிட்டு அவர் அங்கிருந்து எழுந்து சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்
இதில் என்ன கொடுமைனா, இதனால் தான் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார் என்றால்.....இவரிடம் படுக்கைக்கு அழைத்தது தென்னிந்திய தயாரிப்பாளர் தான் என வெட்ட வெளிச்சமாகி உள்ளது .
இதனை காரி துப்பாத குறையாக ராதிகா ஆப்தே சொன்ன விதம் தான் ஹய்லைட்.....
