தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுக்கும் ஆண் நண்பர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தொலைக்காட்சி நடிகை நிலானி, போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

 

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. நடிகை நிலானி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டை கண்டித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டு சர்ச்சைக்குள் சிக்கியவர்.  போலீஸ் உடை அணிந்து கொண்டு, போலீசாரை கண்டித்து வீடியோ வெளியிடப்பட்டதற்கு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

 

இந்த நிலையில், நடிகை நிலானி, தனது நண்பர் லலித்குமார் (33) மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லலித்குமார் வற்புறுத்தி வருகிறார் என்றும், படப்பிடிப்பு தளத்திற்கே வந்து லலித் குமார் தொல்லை கொடுப்பதாக நிலானி கூறியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி தொல்லை கொடுக்கும் லலித்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் நிலானி தெரிவித்துள்ளார்.