ஏலம் விடப்பட்ட மதுவந்தியின் வீட்டில் ரூ.30 லட்சம் பொருள் திருட்டு

தனியார் நிதி நிறுவனத்தில் பெறப்பட்ட கடனை முறையாக திரும்ப செலுத்தாத காரணத்தால் ஏலம் விடப்பட்ட மதுவந்தியின் வீட்டில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 

actress madhuvanti complaint against financial institution in chennai

பாஜகவின் செயற்குழு உறுப்பினரான மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2016ம் ஆண்டு வீடு ஒன்றை சொந்தமாக வாங்கினார். வீடு வாங்கும்போது பணப்பற்றாக்குறை காரணமாக தனியார் நிதிநிறுவனம் ஒன்றில் சுமார் ரூ.1 கோடியே 20 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.

மாநில அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் - தமிழக அரசு அதிரடி

ஆரம்ப கட்டத்தில் கடனை முறையாக செலுத்தி வந்த மதுவந்தி பிற்காலத்தில் தவணை செலுத்துவதை நிறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனியார் நிதிநிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு தீர்ப்பு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து மதுவந்தியின் வீடு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சீல் வைக்கப்பட்டு, வீட்டின் சாவி நிதிநிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் சீல் வைக்கப்பட்ட வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக்கொள்ள நிதிநிறுவனம் சார்பில் மதுவந்திக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் அதனை அவர் பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. 

கோவை தொழிற் பூங்கா அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது - தமிழக அரசு

இந்நிலையில் நிதிநிறுவனம் வீட்டை வேறு நபருக்கு ஏலம் விட்டுள்ளது. ஆனால், வீட்டை மற்றொரு நபருக்கு ஏலம் விடுத்தது தனக்கு தெரியாது. தற்போது எனது வீட்டில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை காணவில்லை. அதனை தனியார் நிதிநிறுவனம் தனது கட்டுப்பாட்டில் பதுக்கி வைத்திப்பதாக தெரிகிறது என்று கூறி பொருட்களை மீட்டுத் தருமாறு மதுவந்தி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios