Actress Bhavana arrested in Dileep Police today

நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மளையால பிரபல நடிகர் திலீப்பை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். 

மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பாவனா. மலையாளம் மற்றும் இன்றி தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் மலையாள திரையுலகில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில் என்பவரால் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். பாவனாவை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று மலையாள திரையுலகத்தினர் ஒன்று திரண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து கேரள காவல்றையினர் தனிப்படைகள் அமைத்து இந்த வழக்கில் சம்பந்தபட்ட 6 பேரை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜரான பல்சர் சுனில், இச்சம்பவத்தில் பல பிரபலங்கள் உள்ளதாகவும் அவர்கள் சிக்குவார்கள் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியானது.

மேலும் பல்சர் சுனில், பாவனாவை ஆபாசமாக எடுத்த புகைப்படங்கள் அடங்கிய மெமரி கார்டை, கொச்சியில் உள்ள நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவி காவியா மாதவன் வணிக நிறுவனத்தில் கொடுத்ததாக கூறினார். 

இதைதொடர்ந்து, இந்த வழக்கில் நடிகர் திலீப் மற்றும் காவியா மாதவன் ஆகியோர் சம்மந்தப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த திலீப்பை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று அவரை கைது செய்துள்ளனர்.