Actors Vijay Birthday Posters in Government School - teachers and parents shocked

மதுரையில் அரசு பள்ளியின் வளாகத்துக்குள் அதாவது பள்ளி கட்டடத்தின் மீது நடிகர் விஜய் பிறந்த நாள் போஸ்டர்ர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் அதிர்ருப்தி தெரிவித்துள்ளனர்.

மதுரை பனகல் சாலையில் அரசு மாநகராட்சி மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சுற்றுச் சுவர் மற்றும் பள்ளிக் கட்டடத்தின் மீது நடிகர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து அவரது ரசிகர்கள் பள்ளியின் சுற்றுச்வரில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரை பள்ளி ஊழியர்கள் கிழித்தெறிந்தனர். ஆனால், பள்ளி காம்பவுண்ட் சுவர் மீது ஏறி, வகுப்பறை சுவர்களில் போஸ்டர் ஒட்டுகின்றனர். இது குறித்து பள்ளி கல்வி துறையிடம் புகார் அளித்துள்ளோம் என்று பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் அருகே இதுபோன்று போஸ்டர்கள் ஒட்டப்படக் கூடாது என்று மதுரை போலீசாரால் பலமுறை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனாலும் இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைப்புகள், இயக்கங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.