Actor Vivek about Kala
காலா திரைப்படத்தில் ரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டதாக நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘
இயக்குநர் பா.ரஞ்சித் - நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் கபாலி படத்துக்குப் பிறகு அடுத்து மீண்டும் இணைந்த படம் காலா. இந்த படம் கடந்த 7 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாகியது.

இந்த படத்தில் சமுத்திரகனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், வத்திக்குச்சி திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர். காலா படம் வெளியான முதல் நாள் அன்று ரூ.50 கோடிக்குமேல் வசூலை அள்ளியது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
காலாவை பாராட்டி பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் விவேக் காலா படம் குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், காலா பார்த்தேன். சூப்பர் ஸ்டாரை வித்தியாசமாக கையாண்ட படக்குழுவினருக்கு பாராட்டுகள். எல்லோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். ஆயினும், ரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டது என்று நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்.

