அந்தப் புன்னகையில் பெரியார், அண்ணா, கலைஞரை பார்த்தேன்… முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் பாராட்டு!!
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் வெளிநடப்பு செய்த போது முதல்வர் புன்னகைத்ததை சுட்டிக்காட்டி நடிகர் சத்யராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் வெளிநடப்பு செய்த போது முதல்வர் புன்னகைத்ததை சுட்டிக்காட்டி நடிகர் சத்யராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தொடரில் திமுக கூட்டணி கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். இருந்த போதிலும் ஆளுநர் தனது உரையை நிறைவு செய்தார். அப்போது அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரால் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்னும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிராக போராட்டம் தேவையா? திமுகவுக்கு எதிராக கொந்தளித்த வானதி சீனிவாசன்
அந்த தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் புன்னகைத்தார். அதனை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மனிதருக்கு அழகு சிரிப்பு. சிரிப்பை விட அழகானது புன்னகை. சமீபத்தில் ஒரு புன்னகை என்னை ரொம்பவே கவர்ந்தது.
இதையும் படிங்க: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம்... ஓ.பன்னீர்செல்வம் கூறுவது என்ன?
அது, சட்டசபையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் புன்னகை. அந்தப் புன்னகையில் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் சுயமரியாதை சுடர்விட்டது. பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம் பளிச்சிட்டது. கலைஞர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி கிளர்ந்தெழுந்தது. தமிழ்நாடு எனும் மாநிலத்தில் வாழும் ஒரு சாதார குடிமகனாக முதல்வரின் புன்னகையில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். காலரை கூட தூக்கி விட்டுக் கொள்கிறேன். ஹாட்ஸாப் டூ அவர் சிம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.