நீட் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த சட்ட அமைச்சகத்திற்கும் அனைத்து கட்சிகளுக்கும் நடிகர் கமலஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு வருட வாய்ப்பு அவசர சிகிச்சையே எனவும், இனி என்ன செய்வோம் எனவும் கமலஹாசன் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு விலக்களிக்கப்படும் என்றும், நிரந்தர விலக்கு என்பது கிடையாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

இதையடுத்து, தமிழக அரசு அவசர சட்ட முன் வடிவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. தமிழக அரசின் அவசர சட்ட முன்வரைவு மற்றும் கூடுதல் ஆவணங்களை சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் சட்ட அமைச்சத்திற்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த 3 அமைச்சகங்களும் அவசர சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, அவசர சட்ட முன்வரைவு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதைதொடர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க அவசர சட்ட வரைவுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்நிலையில், நீட் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த சட்ட அமைச்சகத்திற்கும் அனைத்து கட்சிகளுக்கும் நடிகர் கமலஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு வருட வாய்ப்பு அவசர சிகிச்சையே எனவும், இனி என்ன செய்வோம் எனவும் கமலஹாசன் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.