கிருஷ்ணகிரி:

தேடுதல் வேட்டையின் போது தலைமறைவான போலி மருத்துவர்களை தேடும் பணி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலி மருத்துவர்கள் கிளினிக் நடத்தி வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவின் பேரில் நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் அசோக்குமார் சுகதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் பிரியாராஜ் தலைமையில், காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த் துறையினர் கொண்ட குழவினர் சனிக்கிழமை அதிரடியாக சோதனை நடத்தினர்.


இதில் போலியாக இயங்கி வந்த 25 கிளினிக்குகள் சீல் வைக்கப்பட்டன. இதில் முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்ததாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதிகாரிகள் சோதனை நடத்துவதை அறிந்து 27-க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்களை தலைமறைவாகி விட்டனர்.

இந்நிலையில், தலைமறைவான போலி மருத்துவர்களை தேடும் பணி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.