புதுக்கோட்டை

சிறுமி ஆஷிஃபாவை கற்பழித்து கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
சிறுமி ஆஷிஃபாவை கற்பழித்து கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

காஷ்மீரில் சிறுமியை கற்பழித்து கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், சின்னப்பா பூங்கா அருகே நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க. மாவட்ட தலைவர் முகம்மது சாதிக் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நிஜாமுதீன் முன்னிலை வகித்தார். 

மனிதநேயமக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல்கனி, ஆம் ஆத்மி கட்சி மாவட்ட செயலாளர் அருண்மொழி, செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அறந்தாங்கியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க. மாவட்டச் செயலாளர் கிரீன் முகமது தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜெகதைசெய்யது முன்னிலை வகித்தார். 

இதில், திருச்சி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி துணைச் செயலாளர் ஹுமாயூன்கபீர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன் மற்றும் பலர் பங்கேற்றனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், "நீதி வேண்டும் நீதி வேண்டும் சிறுமி ஆஷிஃபாவுக்கு நீதி வேண்டும்" என்று முழக்கமிட்டனர்.