act like Police two thieves snatched 2 pounds jewelry from a woman

மதுரை

போலீஸ் போல நடித்து பெண்ணிடம் இருந்து 2 சவரன் நகையை பறித்த திருடர்களை பிடிக்க காவலாளர்கள் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். 

மதுரை மாவட்டம், கரிமேடு மெய்யப்பன் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மனைவி ஜக்கம்மாள் (70). கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். 

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஜக்கம்மாளை நிறுத்தி, தாங்கள் இருவரும் போலீஸ் என்றும், இந்தப் பகுதியில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் நகைகளை கழுத்தில் அணிந்து கொண்டு செல்லவேண்டாம் என்று கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஜக்கம்மாள் அணிந்திருந்த 2 சவரன் நகையை கழற்றி தருமாறி கூறி, அதனை காகிகத்தில் பொட்டலம்போல மடித்துக் கொடுத்துள்ளனர். 

ஜக்கம்மாளும், அவர்களை கொடுத்ததை அப்படியே வாங்கி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர், அவர் அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது அதில் வெறும் கற்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

உடனே தனது கணவருடன் தெரிவித்துவிட்டு, இருவரும் சேர்ந்து கரிமேடு காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று புகார் அளித்தனர். நடந்ததை கேட்ட காவலாளர்கள் தங்கள் பெயருக்கே அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றிய திருடர்கள் மீது வழக்குப்பதிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். 

போலீஸ் போல நடித்து பெண்ணிடம் இருந்து 2 சவரன் நகையை திருடர்கள் பறித்த சம்பவம் அந்தப் பகுதியில் காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.