ஒ.என்.ஜி.சி நிறுவனம் நெடுவாசல் பிரச்சனையில் ஒரே நிலையில் தான் உள்ளது எனவும், நெடுவாசலில் எரிவாயு எடுக்கும்பணி பாதுகாப்பானது எனவும், ஒ.என்.ஜி.சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி அனுமதி அளித்தது. விளைநிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் இரவு பகலாக கிராம மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதேபோல் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி அமைத்த குழாயில் இருந்து திடீரென கச்சா எண்ணெய் வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமைடைந்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராகவும் எண்ணெய் குழாயை அகற்ற கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் மீது தடியடி நடத்தி 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடவே இன்று ஜாமினில் விடுதலை ஆகியுள்ளனர். 

இந்நிலையில், ஒ.என்.ஜி.சி நிறுவனம் நெடுவாசல் பிரச்சனையில் ஒரே நிலையில் தான் உள்ளது எனவும், நெடுவாசலில் எரிவாயு எடுக்கும்பணி பாதுகாப்பானது எனவும், ஒ.என்.ஜி.சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

மேலும், நெடுவாசல் எண்ணெய் குழாயை பொறியாளர்கள் கவனமாக பாதுகாத்து வருவதாகவும், கதிராமங்கலத்தில் பதித்த எண்ணெய் குழாய்கள் உறுதியானவை எனவும் குறிப்பிட்டார். 

குழாய் பதித்த இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்படுவதாகவும், 110 எண்ணெய் கிணறுகள் தொண்டுவதற்காக திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார்.