வேலூர் அருகே ரத்தினகிரியில் ஒன்றன் பின் ஒன்றாக வந்த 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 6 உயிரிழந்தனர். 

வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒருவர் சாலையை கடக்க முற்பட்டார். 

இதனால் வேகமாக வந்த காரின் டிரைவர்  திடீரென பிரேக் பிடித்தார். இதனால் பின்னால் வந்த இரண்டு கார்கள் திடீரென பிரேக் பிடிக்க முயன்ற போது ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.  இதில் 3 கார்களும் தீப்பிடித்து எறிந்தது. 

இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயனைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். 

இதில் காரில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.