About MLA noimation issue in puducheery Speaker refuses to accept

புதுச்சேரியில் கிரண்பேடியால் பதவி பிரமானம் செய்து வைக்கப்பட்ட 3 எம்.எல்.ஏக்களின் நியமனத்தை ஏற்க சபாநாயகர் வைத்தியலிங்கம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபையில் 30 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இதில் 3 எம்.எல்.ஏக்களை அரசே நியமித்து கொள்ள அதிகாரம் உள்ளது. இதைதொடர்ந்ந்து, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆளும் நிலையில், பா.ஜ.க உறுப்பினர்களைநியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.

புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், இந்து அமைப்புகளின் தீவிர ஆதரவாளர் செல்வ கணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த பதவிக்கு கவர்னர் கிரண்பேடி 3 பேரை தேர்வு செய்து அந்த பட்டியலை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்தார்.

இது காங்கிரஸ் தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் சபாநாயகர் இருக்கும் நிலையில் துணைநிலை ஆளுனர் கிரண்பேடியே அவர்கள் மூன்று பேருக்கும் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

இது மேலும் புதுச்சேரி ஆளும் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

கிரண்பேடியின் இந்த செயலை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், கிரண்பேடி பதவி பிரமானம் செய்து வைத்த 3 எம்.எல்.ஏக்களின் நியமனத்தை ஏற்க முடியாது என புதுச்சேரி சபாநாயகர் வைத்தியலிங்கம் மறுப்பு தெரிவித்துள்ளார்.