தான் பெற்ற இரண்டு குழந்தைகளையே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி, பாலில் விஷம் கலந்துக்கொடுத்த கொன்ற அபிராமி தற்போது சென்னை புழல் ஜெயிலில் உள்ளார். 

குன்றத்தூரை சேர்ந்த அபிராமியின் கணவர் விஜய் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார்.அபிராமிக்கும் விஜய்கும் இரண்டு குழந்தைகள் இருந்தனர். அபிராமிக்கும் அதே பகுதியில் பிரியாணி  கடையில் பணிபுரியும் சுந்தரத்திற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது.

கள்ளக்காதல் பெரிதாக தெரியவே, குழந்தைகளை கொன்று விட்டாள் அபிராமி. இந்லையில் இவருடைய  உறவினர் ஒருவர் அனுமதி பெற்று புழல் சிறையில் உள்ள அபிராமியை நேரில் சென்று பார்த்து உள்ளார்.அப்போது "நான் தப்பு செய்து விட்டேன்.. என் குழந்தைகளின் நினைவுகள் என்னை வாட்டுகிறது..எனக்கு உடனே குழந்தைகளின் போட்டோவை பார்க்க வேண்டும் என கதறி அழுது உள்ளதாக செய்திகள் வெளியாகி  உள்ளது.

இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அபிராமி சிறையில் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார் என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கு சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.