aa.rasa denounce bus tariff hike Participation in public meeting in pudhukottai

புதுக்கோட்டை

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. - கூட்டணி கட்சிகள் புதுக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பங்கேற்றார்.

புதுக்கோட்டை மாவட்டம், திலகர் திடலில் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருமயம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரகுபதி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பங்கேற்று பேசினார். "பேருந்து கட்டண உயர்வு தேவை இல்லாதது. இந்த உயர்வுக்கு நிர்வாக சீர்கேடே காரணம்" என்று அவர் பேசினார்.

இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, ஆலங்குடி மெய்யநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைப்பித்தன், நகர செயலாளர் நைனாமுகமது, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் முருகேசன்,

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி விடுதலை கனல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செங்கோடன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.