தன்னை விட 13 வயது அதிகமான விதவை பெண்ணை காதலித்து ஆசை வார்த்தைக் கூறி நடித்து உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் வான்மதி இவருக்கு வயது 34. இவருக்கு, கடந்த 2011-ம் ஆண்டு முனீஸ்வரன் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வருடத்திலேயே முனீஸ்வரன் உடல்நலக் குறைவால் இறந்துள்ளார்.

வாழ்க்கையை தொடங்கிய நேரத்திலேயே, கணவரை இழந்த வான்மதி தன்னை காப்பாற்றிக் கொள்ள  சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அவர் வேலைக்கு சேர்ந்தார். அதில், திருவண்ணாமலை நேதாஜி நகரை சேர்ந்த 21 வயதுடைய சந்துரு என்ற வாலிபரும் பணி புரிந்தார். இருவருக்கும் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

அப்போது, வாழ்க்கையில் நடந்த சோகமான சுக, துக்கங்களை சந்துருவிடம் வான்மதி கூறினார். இதனை கேட்ட சந்துரு, வான்மதிக்கு ஆறுதல் கூறி அதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள திட்டம் போட்டுள்ளார். தன்னை விட 13 வயது மூத்தவரான வான்மதியை காதலிப்பதாக கூறி தனது வலையில் விழ வைத்தார்.

மூச்சு இருக்கும் வரை உன்னை கைவிட மாட்டேன். பெற்றோர் எதிர்த்தாலும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை ஆசையாக பேசியிருக்கிறார். வயது குறைந்த வாலிபரை காதலிக்கிறோம். இது திருமணத்திற்கு சாத்தியமா என்று கொஞ்சம் கூட யோசிக்காத வான்மதியும், தனக்கு ஒரு துணை கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்திலும் நம்பிக்கையிலும் சந்துருவின் ஆசைக்கு எல்லாம் இணங்கி உள்ளார்.

வான்மதி வெகுளியாக இருப்பதை தன்னுடைய சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்ட சந்துரு, வேலையில் இருந்து அடிக்கடி விடுமுறை எடுத்துக் கொண்டு அவரை அழைத்துக் கொண்டு பீச், பார்க், சினிமா தியேட்டர் என ஊர் சுற்றினார். தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று அடிக்கடி உல்லாசம் அனுபவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக சந்துரு வான்மதியுடன் காதல் லீலைகள் உல்லாசமாக இருந்திருக்கிறார். தன் ஒவ்வொரு நாளும் எமார்ந்துகொண்டிருக்கிறோம் என தெரியாத வான்மதி அதிகம் இடம் கொடுத்துவிட்டார். இந்த நிலையில், ஓராண்டு முன்பு சந்துரு வேலைக்கு முழுக்கு போட்டு விட்டு வான்மதியிடம் சொல்லிக் கொள்ளாமல் திருவண்ணாமலைக்கு போய்விட்டார்.

சந்துருவுக்கு போன் செய்த வான்மதி என்னை எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு, சந்துரு உன்னுடன் பழகியது உல்லாசம் அனுப்பவிக்க தான். திருமணம் செய்து கொள்ள முடியாது என நக்கலாக பேசியிருக்கிறார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வான்மதி, முதல் கணவரும் இறந்து விட்டார். 13 வயது குறைவான காதலனும் தன்னை முழுமையாக மூன்று வருடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு சென்றுவிட்டான் என தனது நிலையை நினைத்து கதறி அழித்திருக்கிறார். மீண்டும் மீண்டும் சந்துருவுக்கு போன் செய்து திருமணம் செய்து கொள் என்று கெஞ்சினார்.

சந்துரு திருமணத்திற்கு தொடர்ந்து மறுத்ததால், திருவண்ணாமலைக்கு சென்ற வான்மதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். காதலன் சந்துருவை தனக்கு திருமணம் செய்து வைக்க கோரினார். இதனையடுத்து போலீசார், சந்துரு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.