திருமணம் ஆன ஒரே மாதத்தில், இளம்பெண் ஒருவர் தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

உடையார்பாளையம் அருகே, தா.குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர், பெரியசாமி. இவர், சிங்கப்பூரில் வேலைபார்த்து வந்தார். 

இவருக்கும் மேலசெங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த வைதேகி என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. 

பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்துவந்த வைதேகி, விருப்பமில்லாமல் பெரியசாமியைத் திருமணம் செய்ததாக தெரிகிறது. 

இருவரும் திருமணம் ஆன நாளிலிருந்து சேர்ந்து வாழாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.  இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கி  இன்று காலை எழுந்துள்ளனர். ஆனால் வைதேகியை மட்டும் காணவில்லை. அவரது ரூமில் ஒரே ரத்தக்கறை மட்டும் படிந்திருந்தது. 

இதையடுத்து வைதேகியை தேடியபோது, அவரது உடல் பக்கத்தில் உள்ள கிணற்றில் மிதந்து கிடந்தது. 

இதைப்பார்த்த உறவினர்கள் அவரது உடலை மீட்டு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலறிந்து வந்த பொலீசார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். 

மேலும் பெரிய சாமியை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில்,  நள்ளிரவில் கையை பிளேடால் அறுத்துக்கொண்டு, வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் விழுந்து வைதேகி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.