கள்ளத்தொடர்பு காரணமாக கள்ளக் காதலனை காதலியின் கண் முன்னே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் சிவசக்தி நகரில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கழுத்தில் முன்னும் பின்னும் கொடூரமாக வெட்டப்பட்டுக் கிடந்த இளைஞரின் உடலை திருப்பூர் மத்திய போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றிய சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பிறகு அந்த சடலத்தின் சட்டைப்பையில் இருந்த செல்போனை ஆராய்ந்ததில், கொல்லப்பட்டது குளித்தலையைச் சேர்ந்த லோகநாதன் என்பது தெரியவந்தது.

திருப்பூரில் பின்னலாடை தொழிற்சாலையில் வேலை செய்து வரும் இவர் தனது அண்ணன் நாகராஜின் வீட்டுக்கு வந்தபோது அவர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நாகராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான பகீர் உண்மைகள் வெளியாகியுள்ளன. 

குளித்தலையைச் சேர்ந்தவர் முருகன் அவரது மனைவி நளினி. இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் லோகநாதன். நளினிக்கும் லோகநாதனுக்கும் இடையே  பழக்கம் ஏற்பட்டுள்ளது இந்த பழக்கம் நாளடைவில் தவறான தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் தனியார் லாட்ஜில் ரூம் எடுத்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். இதையறிந்த முருகன், இருவரையும் கண்டித்துள்ளார். இதனையடுத்து நளினியும், லோகநாதனும் ஒரு வாரத்துக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினர்.

கிருஷ்ணகிரி சென்ற இந்த கள்ளக்காதலர்கள் அங்கேயே ஒரு வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று திருப்பூரில் உள்ள தனது அண்ணன் நாகராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். இதனையறிந்த கணவர் முருகன் லோகநாதனுடன் செல்போனில் பேசினார். நளினியுடன் சேர்த்து வைப்பதாகவும், திருமணம் செய்து வைப்பதாகவும் கூறவே, இதை நம்பிய இருவரும் திருப்பூரில் தாங்கள் இருக்கும் இடத்தை கூறியுள்ளனர். அங்கு சென்ற முருகனை சந்திக்க நளினியுடன் வந்த லோகநாதனை, முருகனும், நளினியின் சகோதரரும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். கொலை செய்ய முயன்றதை அறிந்த லோகநாதன், தப்பி ஓடினார். விடாமல் விரட்டிய முருகன், தனது மனைவி நளினியின் கண் முன்னே துடிக்க துடிக்க அவரது காதலனை வெட்டி சிதைத்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் மடிந்து விழுந்த லோகநாதன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொலைக்கான காரணத்தை விசாரணையில் தெரிந்து கொண்ட போலீசார், குளித்தலைக்கு சென்று நளினி, முருகன், நளினியின் தம்பி பெருமாள் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களது வாக்குமூலத்தின்படி,முருகன், பெருமாளை கைது செய்த போலீசார், நளினியை சாட்சியாக வழக்கில் சேர்த்துள்ளனர்.