A Young Girl Rape in manapparai

இளம்பெண்ணை ஆசைவார்த்தை காட்டி உல்லாசம் அனுபவித்த வாலிபர், கர்ப்பமான நிலையில் வேறு பெண்ணுடன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள சீத்தப்பட்டியைச் சேர்ந்த 17 வயது பெண் சமீபத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற வாலிபர், அந்த சிறுமியிடம் உன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமியும் பழனிச்சாமியுடன் கடந்த சில மாதங்களாக நட்பில் இருந்துள்ளார். இந்த நட்பு காதலாக மாறியுள்ளது.

இதனால் இவர் தனிமை கிடைக்கும் போதெல்லாம் அந்த சிறுமியிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதில், சிறுமி கர்ப்பம் அடைந்தார். அவரின் உடலில் மாற்றம் காணவே குடும்பத்தினர் கேட்டனர். அப்போது பழனிச்சாமி தன்னிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து விட்டதாக கூறியதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே சிறுமி கர்ப்பம் அடைந்த தகவல் அறிந்ததும் பழனிச்சாமி தப்ப நினைத்தார். மேலும் திண்டுக்கல் மாவட்டம், கொம்பேரிபட்டியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணை கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த வி‌ஷயம் சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரிய வரவே இது தொடர்பாக மணப்பாறை மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் மகளிர் இன்ஸ்பெக்டர் வாசுகி விசாரணை நடத்தினார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி 2 மாதமாக கர்ப்பமாக இருப்பதாக தெரிய வந்ததுடன், மேலும் ஒரு பெண்ணை பழனிச்சாமி திருமணம் செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய பழனிச்சாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.