படுக்கையறையில் ஒன்றாக இருக்கும் வீடியோவை காட்டி,  தனது கணவருடன் இனிமேல் பழகாதே என எச்சரித்த அக்காவை தங்கையே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் பூபாலன். இவரது மனைவி நதியா. இவர்களுக்கு 4 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர். பூபாலன் திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையத்தில் வசித்து வருகிறார். மேலும் பனியன் நிறுவனங்களில் கான்டிராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் நதியாவின் சித்தி மகள் ரேகாவும்  வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 14ம்தேதி காலையில் பூபாலன் வேலைக்கு சென்று விட்டு இரவு திரும்பிய போது, வீட்டுக்குள் நதியா கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 4 வயது பெண் குழந்தையை காணவில்லை. நதியா அணிந்து இருந்த 5 பவுன் நகை, செல்போன் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.  நதியாவின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து போலீசார் சந்தேகத்தால், நதியாவின் சித்திமகள் ரேகாவிடம் விசாரணை நடத்தியதில் அவரும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து நதியாவை கொன்றது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலை குறித்து, போலீசாரிடம் ரேகா அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாவது: எனது சொந்த ஊர் செங்கம். எனது கணவர் கஜேந்திரன். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனக்கும் செங்கத்தை சேர்ந்த நாகராஜ்க்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இது எனது கணவருக்கு தெரிந்துவிட்டதால் அவர் பிரிந்து சென்று விட்டார். இதனால் நான் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடந்த 2 ஆண்டுக்கு முன் இடுவம்பாளையம் வந்து வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன்.  என்னுடன் நாகராஜும் வந்து தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

அக்கா நதியாவின் கணவர் பூபாலன் அத்தான் உறவு முறை என்பதால் நெருக்கமாகி பழகினேன். இந்த பழக்கமும் கள்ளக் காதலாக மாறியது. இதனையடுத்து உனது விவாகரத்து வழக்கு முடிந்தவுடன், திருமணம் செய்கிறேன் என உறுதியளித்தார்.

இந்த நிலையில், எனது அக்காள் கணவர் பூபாலனும் நானும் படுக்கையறையில் பலமுறை இருந்தோம். அப்போது எனது செல்போனில் படமெடுத்துக் கொண்டோம். இப்படி நாங்கள் ஒன்றாக இருக்கும் வீடியோ எனது அக்கா நதியாவிடம் சிக்கியது.

அந்த வீடியோவை என்னிடம் காட்டி, என் கணவருடன் இனிமேல் பழகாதே என்று நதியா எச்சரித்தார். இதனால் கோபமான நான் இனியும் நதியா உயிரோடு இருந்தால், பூபாலனை திருமணம் செய்ய முடியாது. எனவே நதியாவை தீர்த்துக்கட்ட வேண்டும் என முடிவு செய்தேன். என் முடிவுக்கு நாகராஜூம் சம்மதித்தார்.

கடந்த 14ம் தேதி இரவு 7 மணிக்கு நாகராஜூம், நானும் நதியா வீட்டிற்கு சென்றோம். நாகராஜை வெளியே காத்திருக்க சொல்லிவிட்டு, நான் மட்டும் உள்ளே சென்று நதியாவுடன் பேசிவிட்டு, குழந்தை கொலையாளியை அடையாளம் காட்டி விடும் என்பதால் 4 வயது மூத்த மகளை என்னுடன் அழைத்து செல்கிறேன் என்று கூறிவிட்டு எடுத்து சென்றேன்.

பின்னர் வெளியே காத்திருந்த  நாகராஜ் உள்ளே சென்று நதியா கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, அவர் அணிந்து இருந்த 5 பவுன் நகை, செல்போனை எடுத்துக்கொண்டு பெங்களூர் சென்று விட்டார். இவ்வாறு தனது வாக்குமூலத்தில் ரேகா தெரிவித்துள்ளார்.