சொகுசு கார்களை திருடி காதலிகளுடன் அஜால் குஜால்..! மாங்காட்டில் கார் திருடிய சிறுவனின் பகீர் வாக்குமூலம்..!

சென்னை மாங்காட்டில் கார் திருடிய நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிரனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருட்டு கும்பலில் உள்ள ஒரு சிறுவன் இது குறித்து தெரிவித்த ஒரு தகவல்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மாங்காட்டில் வசிக்கும் செல்வம் என்பவர் கார் டிரைவராக உள்ளார். இவர் அங்குள்ள ஒரு பகுதியில் காரை நிறுவிட்டு, சிறுநீர் கழிக்க ஓரமாக சென்று உள்ளார்.

அப்போது அங்கு வந்த கும்பல் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி காரை கடத்தி சென்று விட்டனர்.இதே கும்பல் மறுநாள் மதுரவாயலில் இன்னொரு காரை இதே பாணியில் கடத்தி சென்று உள்ளனர்

இது குறித்து காவல் துறைக்கு தெரிவிக்கவே, இந்த புகாரும் மாங்காடு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

பின்னர் தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், குன்றதூரை சேர்ந்த கார் திருடன் அப்துல் என்பவரையும், நந்தம்பாக்கத்தை சேர்ந்த விஜய் தனுஷ் அருள்தாஸ் மற்றும் 17 வயது சிறுவனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்

சிறுவனிடம் விசாரணை செய்த போது.. பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.அதில்

"6 ஆவது படிக்கும் போதே எனக்கு படிப்பு ஏறாததால் கார் ஷெட்டில் வேலைக்கு சென்றேன்..மேலும் அங்கு வரும் காரின் என்ஜினை கழற்றி, வேறு என்ஜினை பொருத்தி அதன் எண்ணை ஆர்சி புத்தகத்திலும் மாற்றி கொடுத்து விடுவோம்

இதற்கு பதிலாக திருடப்பட்ட நல்ல என்ஜினை அதிக விலைக்கு விற்று அதில் வரும் காசை நாங்கள் ஐந்து பேரும் பங்குப்போட்டுக் கொள்வோம்....

இதில் வரும் பணத்தை வைத்து விலை மாதர்களிடம் சென்று பணத்தை செலவிட்டு வந்தோம்" என தெரிவித்து உள்ளான்.

இந்த ஐந்து பேர் கொண்ட திருட்டு கும்பல், சொகுசு கார்களை திருடி அவற்றை விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தை உல்லாசத்திற்கு மட்டுமே பயன்படுத்தி வந்து உள்ளனர். இந்த கும்பல் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.