Asianet News TamilAsianet News Tamil

பல போட்டிகளில் பரிசுகளை அள்ளிக் குவிக்கும் அஜித் ஆலோசனையில் உருவான குட்டி விமானம்!

A small flight made in Ajiths advice to win prizes in many competitions
A small flight made in Ajiths advice to win prizes in many competitions
Author
First Published Jul 16, 2018, 10:18 AM IST


அண்ணா பல்கலைகழகத்தில் ஆலோசகராக உள்ள நடிகர் அஜித்தின் ஆலோசனையை பெற்று ''தாக் ஷா'' எனும் குழுமாணவர்கள் கண்டுபிடித்துள்ள ஆளில்லா சிறிய ரக விமானம் பல போட்டிகளில், பல பரிசுகளை வென்று, சாதனை படைத்து பாராட்டு பெற்றுவருகிறது.   

அண்மையில் கல்லூரி மாணவர்களுடன் அஜித் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரென்டிங் ஆனது. ரேஸில் அதகளம் பண்ணும் நம்ம தல அஜித்  அண்மையில் சிறிய ரக கிளைடர் விமானங்களை வானில் பறக்கவிடும் சாகச விடீயோக்கள் கூட வலைத்தளங்களில் வைரலாகின. 

A small flight made in Ajiths advice to win prizes in many competitions

அண்ணா பல்கலை கழகத்தின் ஆலோசகராக இணைந்து நடிகர் அஜித் மாணவர்களுடன் சேர்ந்து ஆளில்லா விமானம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கிவந்தார்.

இந்நிலையில் அவரது ஆலோசனை குழுவில் இடம்பெற்ற ''தாக் ஷா'' என்ற குழு மாணவர்கள் சேர்ந்து ஆளில்லா சிறிய ரக விமானம் ஒன்றை வடிமைத்துள்ளனர்.  இந்த ஆளில்லா குட்டி விமானமானது பெட்ரோலில் இயங்கியக்கூடியயது.

தொடர்ந்து ஆறு மணிநேரம் 7 நிமிடங்கள் வானில் பறந்தது சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமன்றி சிறியரக விமானம் என்றாலே ரிமோட் மூலம் இயக்கப்படும் என இருந்த நிலையில் அவர்கள் உருவாகியுள்ள விமானம் கணினியில் இயங்கக்கூடியதாக உள்ளது. 

A small flight made in Ajiths advice to win prizes in many competitions

இந்த குட்டி விமானத்தை மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சை அல்லது உறுப்புமாற்று சிகிச்சையின் போது உடல் உறுப்புகளை துரிதமாக எடுத்துச்செல்ல பயன்படுத்தலாம் என நடிகர் அஜீத்குமார், அண்ணா பலகலைகழக பேராசிரியர்கள்  மருத்துவத்துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios