a person arrested due to stolen the thing in thiruvanantha puram
ஒரே ஒரு பொருளை மட்டும் திருடும் வித்தியாசமான திருடன்..! அது என்ன தெரியுமா..?
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நவீன கருவி மூலம் கடையின் பூட்டை உடைத்து, ஒரே ஒரு பொருளை மட்டும் திருடும் வித்தியாசமான திருடனை போலீசார் கைது செய்து உள்ளனர்
குமுளி அருகே, அமாராவதி பகுதியை சேர்ந்தவர் ஹரிகுமார் என்பவற்றின் கடையில் சில நாட்களுக்கு முன்பு 3 சவரன் நகை திருடு போனது. ஆனால் அதே கடையில் இருந்து, 7 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருடப்பட வில்லை...
இதே போன்று, குமுளி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு கடைகளின் பூட்டை உடைத்து ஐபோன்,லேப்டாப்,எல்இடி உள்ளிட்ட ஒற்றை பொருள் மட்டுமே திருடு போனது தெரிய வந்துள்ளது

மேலும், இந்நிலையில் தான் வேறு பொருள் திருடு தொடர்பாக ஒரு பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இவரிடம் செய்யப் பட்ட விசாரணையில் தான், ஒரே ஒரு பொருள் திருடும் திருடனை பற்றி தகவல் வெளிவந்து உள்ளது. இதனை தொடர்ந்து பொடி வைத்து விசாரித்த போலீசார், ஒரே ஒரு பொருள் மட்டும் திருடனான சதீஷை கைது செய்து உள்ளனர்.

சதீஷிடம் விசாரணை மேற்கொண்டதில்,அவர் சொன்ன பதில் போலீசாரை வியப்படைய செய்து உள்ளது.
அதாவது, நிறைய பொருட்களை ஒரே ஒரு கடையில் எடுத்தால் தான் புகார் கொடுக்க முன்வருவார்கள்...ஆனால் நிறைய விலை உயர்ந்த பொருட்கள் இருந்தாலும் அவற்றை எடுக்காமல், அதில் ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்து செல்வது என்னுடைய வழக்கம் என சதீஷ் தெரிவித்து உள்ளார்.
மேலும் இதுநாள் வரை அவர் மீது அந்த அளவிற்கு எந்த புகாரும் வராமல் இருப்பதற்கு இதுதான் காரணமாம். இந்த காரணத்தை கேட்ட போலீசார் திருடனின் வித்தியாசமான யோசனையை கண்டு சற்று வியப்பையும் அதிர்ச்சியும் அடைந்து உள்ளனர்.
