கருணாநிதி நினைவு நாள்...! அமைதி பேரணியில் ஸ்டாலின்...நினைவிடத்தில் மரியாதை.
முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் நினைவு நாளையொட்டி அமைதி பேரணியில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி நினைவு நாள்
தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றுகாலை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதியின் நினைவுதினத்தையொட்டி சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. சென்னை ஓமந்தூரார் அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதனையடுத்து அங்கிருந்து தொடங்கிய அமைதி பேரணியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த பேரணி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை நடைபெற்றது. இந்த அமைதி பேரணியில் கனிமொழி , ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, கே என் நேரு, பொன்முடி, சக்கரபாணி,தங்கம் தென்னரசு, சேகர்பாபு. மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்களும், தயாநிதிமாறன், ஆ ராசா, மு க தமிழரசு என ஏராளமான திமுக நிர்வாகிகளும் பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்களும் இந்த அமைதி பேரணியில் கலந்து கொண்டனர்
மாநில சுயாட்சியும்... கொள்கையில் மாறாத, மானமிகு கருணாநிதியும்..!!
நினைவிடத்தில் அஞ்சலி
ஓமந்தூரார் அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையில் இருந்து தொடங்கிய பேரணி கருணாநிதி நினைவிடத்தில் முடிவடைந்தது. கருணாநிதி நினைவிடத்தில் வங்க கடல் அலை போல அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதில் வங்கக் கடல் தாலாட்டும் சங்கத் தமிழை போற்றுவோம் என்ற வாசகத்துடன் கலைஞர் படம் பொருந்திய பேனர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதே போல அமைச்சர்களும், திமுக நிர்வாகிகளும் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படியுங்கள்
விமர்சிக்க நூறு காரணங்கள்.. புகழ ஆயிரம் காரணங்களை தன்னகத்தே கொண்ட சூரியன்.. கருணாநிதி.