A multi-crore rupee scam by temple idol! Even a drop in the image is not gold! Who is involved in the scandal?
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலையில், துளிகூட தங்கம் சேர்க்கப்படவில்லை என்ற அதிர வைக்கும் உண்மை தற்போது வெளியாகி உள்ளது. பொதுமக்களிடம் தானமாக பெறப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பிரசித்திபெற்ற காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் புதிதாக நிறுவப்பட்ட சோமஸ்கந்தர் சிலையில் துளிகூட தங்கம் சேர்க்கப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுட்பபு பிரிவினர் நடத்திய ஆய்வு, விசாரணையின்போது இந்த திடுக்கிடும் உண்மை வெளியாகி உள்ளது.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சோமஸ்கந்தர் சிலை உள்ளது. இந்த சிலை சிதிலமைந்ததாக கூறி, புதிய சிலை செய்ய பொதுமக்களிடம் தானமாக தங்கம் வசூல் செய்யப்பட்டது. ஐந்தே முக்கால் கிலோ வரை பொதுமக்களிடம் தங்கம் தானமாக வாங்குவதற்கு அறநிலையத்துறையும் அனுமதி வழங்கியது.
ஆனால், உரிய ஆவணங்கள் இன்றி பொதுமக்களிடம் 100 கிலோ வரை தங்கம் வசூலிக்கப்பட்டதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், சிலை தடுப்பு பிரிவினர் நடத்திய ஆய்வு நடத்தினர்.
அப்போது, சிலை குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், புதிய சோமஸ்கந்தர் சிலையை கிண்டியில் உள்ள ஆய்வு மையத்தில் சோதனை செய்யப்பட்டது. உலோக அளவீட்டு கருவியின் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சோமஸ்கந்தர் சிலையில் துளிகூட தங்கம் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
