Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் ஹேப்பி ஸ்ட்ரீட்..! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடி பாடி உற்சாகம்

சென்னை அண்ணா சாலையில் இரண்டு புறமும் நடைப்பெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட்  நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடி பாடி மகிழ்ந்தனர். 
 

A large number of people participated in the Happy Street program held in Chennai and enjoyed dancing
Author
First Published May 21, 2023, 11:29 AM IST

ஹேப்பி ஸ்ட்ரீட்- உற்சாகம்

சென்னை மாநகராட்சி சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இன்று சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு முதல் ஜி.பி.ரோடு சந்திப்பு வரை உள்ள பகுதியில் நான்காவது வாரமாக நடைப்பெற்றது. ஏப்ரல் 30-ந்தேதி மற்றும் மே 7, 14, 21-ந்தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இதற்காக காலை 6 மணி முதல் 9 மணி வரை அப்பகுதியில் சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா சாலையில், சாலையின் இரண்டு புறமும் ஆடல் பாடல் விளையாட்டு  என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.  

A large number of people participated in the Happy Street program held in Chennai and enjoyed dancing

உறுதிமொழி எடுத்த இளைஞர்கள்

இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடல், பாடலுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கயிறு இழுத்தல், கோலப் போட்டி என பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் யோகா, உடற்பயிற்சிகள், செல்ல பிராணிகள் கண்காட்சி என ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் அண்ணாசாலை களைகட்டியது. நிகழ்ச்சியின் நிறைவாக மக்களிடையே பேசிய சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையர் சமய் சிங் மீனா, அண்ணாசாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தியதில் மகிழ்ச்சி என கூறினார். மேலும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்ட மாட்டேன், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்ட மாட்டேன் என அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்தார்.

இதையும் படியுங்கள்

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடுவதாக சொன்ன அறிவிப்பு என்ன ஆச்சு.? தமிழக அரசை சீண்டும் அன்புமணி

Follow Us:
Download App:
  • android
  • ios