திருடனுக்கு விட்ட சாபம்....65 வயது தாத்தா அப்படி என்ன செய்தார்..? ஏன் இந்த சாபம் தெரியுமா..?

சென்னை செம்பியத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெண்ணின் ஸ்கூட்டியில் இருந்து கைப்பையை திருடி சென்றுள்ள முதியவர் கைது செய்யப்பட்டு உள்ளார்

இது குறித்து புகார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார், கைப்பையை திருடி சென்ற நபரை கண்டு பிடித்தனர்.

விசாரணையில் அவர் பெயர் ஆனந்த் என்பவரும், அவருக்கு வயது 65 என்பதும் தெரிய வநதது.

கை பையில் இருந்தது என்ன ..?

ரூ.10 ஆயிரம் மற்றும் பான் கார்டு ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை வைத்து உள்ளார் இந்த பெண்மணி.

ஆனால் திருடனை போலீசார் பிடித்தாலும், அவரிடமிருந்து பான் கார்டையும் ஏடிஎம் கார்டையும் தான் பெற முடிந்தது...காரணம் பத்தாயிரம் ரூபாய்க்கும் குடித்தே தீர்த்து உள்ளார் அந்த மகா குடிமகன்

அந்த முதியவரிடம், "ரூ.10 ஆயிரம் எங்கே என கேட்ட போது, செலவு செய்து விட்டேன் என தெரிவித்து உள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் "ஜென்டில்மேன்" படத்தில் நடிகர் அர்ஜுன் ஸ்டைலில் சொல்லி உள்ளார்.

இந்த வார்த்தையை சொன்ன உடன், பாதிக்கப்பட்ட பெண் குடித்தே பணத்தை அழித்த நபரை பார்த்து சாபாம் விட்டார் .

அப்போது, "அடப்பாவி என் மகனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தை இப்படி பண்ணிட்டீயே...நீ உருப்படவே மாட்டே" என மன வேதனையுடன் சாபம் விட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்துள்ளார் பாதிக்கப்பட்ட அந்த தாய்.