கோவில் வாசலில் கணவனை சரமாரியாக துவைத்து எடுத்த மனைவி...படுபாவி அப்படி என்ன செய்தார் தெரியுமா..? வைரல் வீடியோ...

திருமணம் நடந்து முடிந்து 5 நாட்களே ஆன நிலையில் கணவரை கோவில் வாசலில்  வைத்து துவைத்து எடுத்துள்ளார் மனைவி

அப்படி என்னதான் செய்து இருப்பாரோ என்ற யோசனை உடனே வருகிறது அல்லாவா..?

அதாவது கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த இளம் ஜோடி, சாய்பாபா  காலனியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு வந்து உள்ளனர்.

அப்போது தன்னுடைய கணவர் கையில், வேறு ஒரு பெண்ணின் பெயரை பச்சை குத்தி உள்ள விவகாரம் குறித்து கேட்டுள்ளார் மனைவி. இது குறித்து முன்னுக்கு பின்  முரணாக பேசியதால் கோவிலில் சத்தியம் செய்ய சொல்லி உள்ளார். அப்போது வாக்கு வாதம் முட்டி உள்ளது.

பின்னர், தான் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், அவருக்கு குழந்தை வேறு உள்ளதாம்..இந்நிலையில் தன் மனைவி குழந்தைகளுக்கு தெரியாமல்,வேறு ஒரு பெண்ணை காதலித்து கடந்த ஐந்து நாட்களுக்கு முன் தான் இந்த பெண்ணையும்  திருமணம் செய்து உள்ளார்.

இந்த பெண்ணை பொறுத்தவரை, கடந்த ஐந்து நாட்களாக கணவனே கண் கண்ட தெய்வமாக வாழ்ந்து வந்துள்ளார்.. ஐந்தாவது நாளான இன்று கணவனின்  உண்மையான சாயம் வெளுத்து விடவே அங்கேயே போட்டு தாக்கி உள்ளார்..

ஊர் உலகத்தில் யார் யாருக்கோ எத்தனையோ பிரச்சனை இருக்கும் போது, இப்படியெல்லாம் பெண்களுக்கு பிரச்சனை கொடுக்க இது போன்ற நபர்கள் முக்கிய வேலையாக வைத்து உள்ளனர் போல....

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, நடந்த விஷயம் தெரிந்த பெண்,  ஆவேசமாக  கணவரை அடித்து உதைத்து உள்ளார். இந்த காட்சியை அங்குள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.

மேலும், அங்குள்ள சிலர் அவர்களுக்கு சமாதானம் செய்து வைத்து உள்ளனர்சமாதானாம்  ஆகக் கூடிய விஷயமா இது.....