திருமணமான அன்றே மணமகளுக்கு குழந்தை பிறந்ததால் மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கொளத்தூர், சத்யா நகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஈரோடு,அந்தியூர் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்று உள்ளது. 

திருமணமான அன்று மாலையே, மணப்பெண் தனக்கு வயிறு வலி என்று கூறி உள்ளார். இதையடுத்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.அங்கு மேல் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்க சொன்னதால், அழைத்து சென்றனர். 

மணப்பெண்ணை சோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு குழந்தை பிறக்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இதை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கொளத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தான் கர்ப்பமாக இருப்பதை கூட அறியாத அந்த சிறுமி, திடீரென வயிறு வலி என கூறி மருத்துவமனையில் சேர்க்க, அன்றே அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.